வெம்பக்கோட்டை அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கண்டெடுப்பு

1 month ago 8

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கிடைத்துள்ளது. 13 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த அஞ்சன கோல், 29.5 மி.மீ. நீளமும், 6.6 மி.மீ சுற்றளவும், 2.64 மி.கி. எடையும் கொண்டதாக உள்ளது.

அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக அகழாய்வு இயக்குநர் தெரிவித்தார்.

 

Read Entire Article