வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் ஆபரணம் கண்டெடுப்பு

6 months ago 20

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய சுடுமண்ணால் ஆன ஆபரணம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. நீல நிற கண்ணாடி மணியும் கிடைத்தது. வேலைபாடுகளுடன் கூடிய ஆபரணங்கள் செய்ய முற்காலத்தில் இது போன்ற மணிகளை பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறினார்.

Read Entire Article