
பர்மிங்காம்,
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன கே.எல்.ராகுல் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இவர்களில் ஜெய்ஸ்வால் (87 ரன்கள்), ஜடேஜா (89 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (42 ரன்கள்) பொறுப்பாக விளையாடி ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் இதுவரை 265 ரன்கள் அடித்த நிலையில் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறார்.
இதில் சுப்மன் கில் 255 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் (254 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அதுவும் சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனான 2-வது போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 141 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 265 ரன்களுடனும், ஆகாஷ் தீப் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.