கரூர், பிப். 8: கருர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பகுதியில் புதருக்குள் உள்ள குடிநீர் தொட்டி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பகுதியில் இந்த பகுதியினர் நலன் கருதி குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஏராளமான குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தொட்டி வளாகம் போதிய பராமரிப்பின்றி முட்புதர்கள் மத்தியில் உள்ளது. எனவே, தொட்டியை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி எளிதாக பணியாளர்கள் சென்று வரும் வகையில் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இநத பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி வளாகத்தை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
The post வெண்ணைமலை பகுதியில் புதர் மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி வளாகம் appeared first on Dinakaran.