வெ.இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி

3 months ago 17

பல்லேகலே: இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி நேற்று பல்லேகலேவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 38.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

ஷெர்பேன் ரதர் போர்ட் நாட்அவுட்டாக 74 (82 பந்து, 5 பவுண்டரி,3 சிக்சர்), ரோஸ்டன் சேஸ் 33 மற்றும் கீசி கார்டி 37 ரன் அடித்தனர்.3 மணி நேரம் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் வெஸ்ட்இண்டீஸ் பேட்டிங் அத்துடன் நிறுத்தப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா 69 (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சரித் அசலங்கா 77 ரன் ( 71 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) அடிக்க 31.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன் எடுத்த இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரித் அசலங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post வெ.இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article