பீஜிங்,
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஜெங் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ஜெங்கை எதிர்கொள்கிறார்.