வுஹான் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாதனை

1 month ago 8

வுஹான்: சீனாவில் நடைபெற்ற வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் (22 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்), முதல் செட்டை 6-3 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த கின்வென் ஸெங் 7-5 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் அதிரடியாக விளையாடி கின்வென் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்த சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 40 நிமிடம் போராடி வென்று தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். வுஹான் தொடரில் அவர் ஏற்கனவே 2018, 2019ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இங்கு விளையாடிய 17 போட்டியிலும் சபலென்கா தோல்வியை சந்திக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வுஹான் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article