தேனி, டிச. 7: வீரபாண்டி பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள கன்னிமார்குளம் கரைப்பகுதியில் 100 பனை விதைகள் நடப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வீரபாண்டி பேரூராட்சி சார்பில் வீரபாண்டி பேரூராட்சிக்கு ட்பட்ட முத்துத்தேவன்பட்டியில் உள்ள கன்னிமார்குளத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு, வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலரும் பேரூர் திமுக செயலாளருமான செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்செல்வனின் மகனும் உயர் நீதிமன்ற வக்கீலுமான டி. டி .நிஷாந்த் கலந்து கொண்டு பனைக்கன்றுகள் நடவு பணியை துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி சேர்மன் கீதா சசி திமுக பிரமுகர் சசி, தேனி வடக்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர் டாக்டர் வி .ஆர். ராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பானுமதி, சக்தி, முத்துத்தேவன்பட்டி திமுக கிளைச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை மரக்கன்றுகளை நட்டனர்.
The post வீரபாண்டி பேரூராட்சி சார்பில் பனை விதைகள் நடும் விழா appeared first on Dinakaran.