"வீர தீர சூரன்" வெற்றிக்கு நன்றி தெரிவித்து துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் வைரல்

2 days ago 1

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன் 2' படம் பல தடைகளை தாண்டி நேற்றுமுன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ 3.25 கோடிவசூலித்துள்ளது. இதுவரை ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படம் என்றே அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் தன் தந்தையுடான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, 'வின்டேஜ் சியான்... வீர தீர சூரனுக்கு நன்றி அருண்குமார் சார்." என நெகிழ்ச்சியடைந்துள்ளார். துருவ் விக்ரம் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Read Entire Article