'வீர தீர சூரன்' படத்தில் 10-15 காட்சிகள் மட்டுமே! - இயக்குனர் அருண்குமார்

1 month ago 10

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்தில் வெளியான 'தங்கலான்' கொடுத்த வெற்றியால் விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு 'கலைத்தாயின் இளைய மகன்' என இயக்குனர் அருண் குமாரை நடிகர் எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார். 

இந்தநிலையில் இயக்குனர் அருண்குமார் படம் குறித்து கூறியிருப்பதாவது: "முதலில் 'வீர தீர சூரன் 2' படம் தான் வெளியாகிறது. படம் நேரடியாக சண்டையில் தொடங்குகிறது. அதற்கான காரணம் முதல் பாகத்தில் இருக்கிறது. அந்தப் படம் முதல் பாகம் பின்னர் வெளியாகும். இந்தப் படத்தில் 60- 62 காட்சிகள் எதுவும் இல்லை. வெறும் 10-15 காட்சிகள்தான் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிட நீளமான காட்சிகளாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Read Entire Article