நாமக்கல், மே 6: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பில், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தாய்குடி, தமிழ்குடி, மூத்தக்குடி குன்ற குறவன் சமுதாய மக்கள், ராசிபுரம், ஆண்டகளூர் கேட், பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக குடியிருப்பு, நிலமோ எங்கும் இல்லை. இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், இன்று வரையிலும் வழங்கப்பட வில்லை. அணைப்பாளையம், 85. குமாரபாளையம் அல்லது சிங்களாந்தபுரம் ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.