திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குடும்பத்தகராறில் காஸ் சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்த பிறகு கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகள் வீட்டை விட்டு வெளியே ஓடியதால் உயிர் பிழைத்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் வினோத் (56). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான வினோத் போதையில் தினமும் மனைவி, மகளை அடித்து உதைப்பது வழக்கம்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வழக்கம்போல வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து மனைவி, மகளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென காஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்தார். தீ பிடித்ததும் வினோத்தின் மனைவியும், மகளும் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
இதனால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அதன் பிறகு வினோத் வீட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காஸ் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வீட்டின் மேற்பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டுக்கு தீ வைத்து கணவன் தற்கொலை: மனைவி, மகள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.