வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: அண்ணன் தம்பி கைது

19 hours ago 2


நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே கல்லூரி மாணவியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து, வீடு புகுந்து தாக்கிய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த 24 வயது மாணவி, ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு செல்லும் வழியில், பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி என்பவரின் மகன்கள் நவீன்குமார் (28), தினேஷ்குமார்(26) ஆகியோர், காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து இருவரும் மாணவியை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். அந்த மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பும் போதெல்லாம், பல்வேறு இடங்களில் வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம், மாணவி தனது வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட இருவரும், கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். மேலும், சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த மாணவி கதறினார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். பின்னர், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமார் மற்றும் அவரது அண்ணன் நவீன்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: அண்ணன் தம்பி கைது appeared first on Dinakaran.

Read Entire Article