சேலம், ஜன.9: சேலம் அழகாபுரம் கே.எம்.எஸ் கார்டன் லோட்டஸ் நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் ஆனந்தகுமார்(54). கார் புரோக்கரான இவர், ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் குடும்பத்தோடு எடப்பாடியில் உள்ள வீட்டிற்கு கடந்த 6ம்தேதி சென்று விட்டு நேற்று முன்தினம் சேலம் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹6.15 லட்சத்தை காணவில்லை. உள்ளே புகுந்த நபர்கள், பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருட்டு போன வீட்டில் நகைகளும் இருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டு பூட்டை உடைத்து ₹6.15 லட்சம் ெகாள்ளை appeared first on Dinakaran.