சென்னை: சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த அடிக்கப்பட்ட மருந்து காற்றில் பரவி, தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தன. கணவன் – மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். மருந்து அடிக்கப்பட்ட அறையில் நேற்றிரவு ஏ.சி. போட்டுக்கொண்டு தூங்கிய கணவர் கிரிதரன் (34) மனைவி பவித்ரா (31), மகள் வைஷ்ணவி (6) மற்றும் மகன் சாய் சுதர்சன் (1) நால்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
The post வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த அடிக்கப்பட்ட மருந்து காற்றில் பரவி 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.