வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!

5 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க அதனை நாம் முறைப்படி பராமரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு முறையும் அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் வீட்டிலிருந்தே முறைப்படி ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.

*ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முதலில் முகத்தை கிளின்சிங் செய்ய வேண்டும். முகத்தை நன்கு கழுவிவிட்டு ஒரு சிறிய பஞ்சில் பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
அல்லது பாதாம் எண்ணெய் கொண்டும் செய்யலாம்.

*அடுத்து நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதற்கு சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்ட வடிவில் 3-5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும்.

*வாழைப் பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும். இது முகத்தை பளபளப்பாக்கக்கூடிய பேஸ் பேக்.

*டோனிங் மற்றும் மாய்சரைசிங் செய்ய வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு அல்லது ரோஸ் வாட்டரை கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இளமையான தோற்றத்தை பாதுகாக்கிறது.

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

The post வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article