வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

3 months ago 25

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் முரளி (32), கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் மணவூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடந்தன.

அதில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு காவல் நிலையத்தில் முரளி புகார் அளித்தார். அதன்பேரில் திருவாலங்காடு உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article