பெரம்பூர்: பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் வேதவல்லி (42). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் மகள் நர்மதா மற்றும் உறவினர் மகன் விஷ்வா ஆகியோரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு மாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 சவரன் நகை, 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி செயின் இரண்டு உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து, செம்பியம் குற்றப்பிரிவில் வேதவல்லி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.