வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, ₹65,000 திருட்டு

2 weeks ago 1

திருச்சி, ஜன.21: திருச்சியில் இருவேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து, 3 சவரன் நகை மற்றும் ரொக்கம் ₹65 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி எ.புதூர் விறகுபேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் கடந்த ஜன.17ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, லால்குடியில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டுக்குள் இருந்த 3 சவரன் நகைகள் மற்றும் ₹30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தார். உடன் வீடு திரும்பிய மணிகண்டன் பணம் மற்றும் நகை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து எ.புதூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருச்சி உறையூர் மாதுளம்கொல்லையை சேர்ந்தவர் சரவணன் (54). இவர் சவுராஸ்டிரா தெருவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜன.18ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து ₹35 ஆயிரம் ரொக்கம் உட்பட வீட்டில் இருந்த சில பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சரவணன் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, ₹65,000 திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article