ஓசூர், ஜன.19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சென்னத்தூர் பகுதியில் உள்ள தனியார் லேஅவுட்டில் வசித்து வருபவர் சடையப்பன் (47). இவர் அதே பகுதியில் சிலை வடிவமைக்கும் பணி செய்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் விழா கொண்டாடுவதற்காக, குடும்பத்துடன் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீடான சென்னைக்கு சென்றார். பின்னர், நேற்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பகுதியில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரேவில் இருந்த 25 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து சடையப்பன் ஓசூர் நகர போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்பி தங்கதுரை தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மர்மநபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு வெளியூர் சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகை கொள்ளை ேபான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.