வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை

3 weeks ago 5

செங்கல்பட்டு: வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் ரூ.5.40 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். செங்கல்பட்டு அருகே வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (46). இவர், கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்துக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதில் சங்கரின் மகள் ஓவியா என்பவர் மட்டும் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, சங்கர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து ஓவியா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தந்தை சங்கர் நேரில் வந்துள்ளார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் மறைத்து வைத்திருந்த 18 சவரன் மதிப்பிலான தங்க நகைகள், 650 கிராம வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5.40 லட்சம் ரொக்கப் பணத்தை கடந்த 2 நாட்களுக் முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது சங்கருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து தீவிர விசாரணை நடத்தினர். சங்கரின் வீட்டுக்குள் இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, சங்கர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் குற்றவாளியின் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். மேலும் 18 பவுன் நகைகள், மற்றும் ரூ.5.40 லட்சம், வெள்ளி பொருட்களை திருடி சென்றது குறித்து புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே வெளியூர் சென்று வீடு திரும்பும் நேரத்தை பயன்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவே, இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article