வீடு இடிக்கும் பணியின்போது சோகம்: சுவர் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி

5 hours ago 1

பொன்னேரி: பொன்னேரி அருகே, வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சுவர் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் ஆரோன் (30). கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி நாகஜோதி. இந்த தம்பதிக்கு, அசுருதீன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. நாகஜோதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் ஆரோன் நேற்று அங்குள்ள திரு ஆயர்பாடி பகுதியில் புது வீடு கட்டும் பணிக்காக சென்றிருந்தார். அங்கு, புது வீடு கட்டுவதற்காக பழைய வீடு இடிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாரதவிதமாக திடீரென ஆரோன் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து, இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஆரோனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆரோன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்த போலீசார், பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்று, ஆரோன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரி போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வீடு இடிக்கும் பணியின்போது சோகம்: சுவர் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article