
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஆர்பி சவுத்ரி சார்பில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.