'விவிபாட்' சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனு தள்ளுபடி

6 hours ago 2

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) கட்டுப்பாட்டுப் பிரிவால் மின்னணு வாக்கு எண்ணிக்கையுடன் கூடுதலாக விவிபாட் சீட்டுகளை 100 சதவீதம் கைமுறையாக எண்ண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம்கோர்ட்டு நேற்று ( திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது.

முன்னதாக ஹன்ஸ்ராஜ் ஜெயின் என்பவர், 'விவிபாட்' சீட்டுகளை 100 சதவீதம் எண்ண உத்தரவிடக்கோரி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த சீட்டுகள் துண்டாகி வெளியே வந்தவுடன், வாக்காளர்கள் சரிபார்த்து விட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து, அதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், "முன்பு இதே கோரிக்கையை எழுப்பிய மனுக்கள் மீது எனது தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மீண்டும் மீண்டும் விசாரிக்க முடியாது. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவில் தலையிடுவதற்கான நல்ல முகாந்திரம் இல்லை. ஆகவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

Read Entire Article