
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம், ராவணகி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா பெஞ்சள்ளி (வயது 60). இவர் சம்பவத்தன்று வயலில் வழக்கம்போல் வேலைப்பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் இருந்து வந்த 3 கரடிகளும் அவரை சரமாரியாக தாக்கின. இதனால் வலித்தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். நாகப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த விவசாயிகள் ஓடிவந்து கூச்சலிட்டனர்.
இதனை தொடர்ந்து 3 கரடிகளும் அங்கிருந்து சென்றன. இதையடுத்து, படுகாயமடைந்த விவசாயியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவரகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது குறித்த பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
விவசாயி மீது 3 கரடிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.