விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

2 weeks ago 3

புதுடெல்லி: விவசாயிகள் தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில்,”விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான ஏற்பாடு செய்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. வேளாண்துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை கூட தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விவசாயத்தோடு விலங்குகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு உள்ளிட்டவற்றை செய்வதற்கு ஊக்கமளித்து வருகிறது.

விவசாயிகள் நஷ்டம் அடையும் போது அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கி வருகிறது. அதில், கடந்த 2021-22 காலகட்டத்தில் மாநில அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனது பங்கான ரூ.836 கோடியை இழப்பீடாக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. அதேப்போன்று 2022-23 ரூ.908 கோடியும், மேலும் 2023 -24ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.761 கோடியையும் பயிர் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. இயற்கை பேரிடர் பாதிப்புக்களுக்கும் உரிய உதவியை அரசு விவசாயிகளுக்கு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article