விவசாயிகள் வங்கியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் புத்தக திருவிழா; கலெக்டர் துவங்கிவைத்தார்

1 month ago 7

கரூர், அக். 4: கரூர் பிரேம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம், பபாசியுடன் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழாவினை மாவட்ட கலெக்டர் தங்கவேல், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி துவக்கிவைத்தனர். மேயர் கவிதா முன்னிலை வகித்தார். கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுததுச்செல்லும் நோக்கத்தோடு மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொள்ள்பபட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்தாண்டு கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டை பெற்றது. இதே போல இந்தாண்டு கருர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தக திருவிழா அக்டோபர் 3ம்தேதி முதல் 13ம்தேத வரை பிரேம் மஹாலில் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறவும், கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் கரூர் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாணவர்களுககு பயன்படும் வகையில் மின்நூல் மற்றும் மின்பொருண்மை பதிப்பாளர்களின் படைப்புகளை கொண்ட விற்பனையகங்கள் அமைத்திடவும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தக கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளுர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் கரூர் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தி அந்த படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரூரில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், புத்தக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்தாண்டு நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1.35 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. இந்தாண்டு அதைவிட விற்பனை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். முதல் நாளான நேற்று, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு, வாசிக்க வாசிக்க எனற தலைப்பில் பேசினார்.

இந்த நிகழ்வில், எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், விமல்ராஜ், சார் ஆட்சியர் ஸ்வாதி , கோட்டாட்சியர் முகமது பைசல், துணை மேயர் சரவணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரவணன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் வங்கியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் புத்தக திருவிழா; கலெக்டர் துவங்கிவைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article