விவசாயிகளுக்கு ₹74 ஆயிரம் அபராதம்

1 week ago 3

கெங்கவல்லி, பிப்.1: சேலம் மாவட்டம், கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பில் இருந்து மின் திருட்டில் ஈடுபடுவதாக ஈரோடு மின் தடுப்பு படைக்கு புகார் வந்தது. இதன்பேரில், உதவி செயற்பொறியாளர்கள் முருகானந்தம், மணி உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(50) என்பவர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு ₹38 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், மின் திருட்டு புகார் தொடர்பாக ஜெயந்தி(43) என்பவருக்கும் ₹36,500 அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ₹74,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

The post விவசாயிகளுக்கு ₹74 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article