விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் திசு வாழைக்கன்று

3 months ago 23

நாகப்பட்டினம், அக்.4: திசு வாழைக்கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் வட்டார தோட்டக்கலை துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 எக்டேருக்கு 285 திசு வாழைக்கன்றுகள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் திசு வாழை கன்றுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர். அப்போது திசு வாழை தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார். மேலும் தகவல்களுக்கு 9715141468 என்ற உதவி தோட்டக்கலை அலுவலர் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

The post விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் திசு வாழைக்கன்று appeared first on Dinakaran.

Read Entire Article