‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

18 hours ago 3

சென்னை: நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ‘நான் உயிருடன் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்‘ என நேற்று நேரலையில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019-ல் வெளிநாட்டுக்கு தப்பினார். தனித்தீவு ஒன்றை வாங்கி, அதற்கு கைலாசா என்ற பெயரே சூட்டி, அதற்கென தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பல்வேறு சொற்பொழிவு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

Read Entire Article