விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: பாதுகாப்பு வழங்ககோரி முதியவர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்

2 weeks ago 3

பெரம்பலூர், நவ.5: எங்கள் நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டு எங்களை தாக்கி வரும் நபர்களிடமிருந்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இறந்து போன பேரனின் உருவப் படத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம் அண்ணா நகர் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் தங்கராசு (80) என்பவர் தனது குடும்பத்தாருடன் வந்து கலெக்டர் அலுவலக போட்டிக்கோ பகுதியில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டுவிட்டு பிறகு குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் இருந்த மாவட்ட கலெக்டரிடம் அளித்தப் புகார் மனுவில் தெரிவித்தி ருப்பதாவது : நான் குன்னத்தில் வசித்து வருகிறேன்.

எனக்கு செல்வராஜ், ராஜ்குமார் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி, கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங் களை காலம் காலமாக பயிர் சாகுபடி செய்து அனுபவித்து வரும் நிலையில், அந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் அபகரிக்கும் நோக்கில் அடிக்கடிஎன்னிடமும், எனது மகன்களிடமும் தகராறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக எனது மரு மகள் பரமேஸ்வரி கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியும், எனது மகன் செல்வராஜ் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியும் குன்னம் காவல் நிலையத் தில் புகார் கொடுத்துள் ளனர். இந்த நிலையில் கடந்த அக் 24ம் தேதி மாலை நான் நிலத்திற்கு சென்றிருந்த போது எங்களிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் எதிர் தரப்பினர், காரில் வந்து என்னைத் துரத்தி தாக்க வந்தனர். நான் வீட்டிற்கு வந்தபோது அங்கும் கைகளில் ஆயுதங்களுடன் வந்து சத்தம் போட்டு தகராறு செய்தனர்.

நான் வீட்டிற்குள் எனது குடும்பத் தாரோடு கதவை திறக் காமல் உள்ளே இருந்த போது கல்வீசி தாக்கினார். இந்த சம்பவத்தின் போது அதிர்ச்சி அடைந்த எனது பேரன் ராஜி மயக்கம் அடைந்தான். அதனால் குன்னம் போலீசருக்கு புகார்செய்தவுடன் 4 போலீ சார் அங்கு வந்து கல் வீசித் தாக்கியவர்களை துரத்தி விட்டு, எங்களை மீட்டனர். சம்பவத்தின்போதுமயக்கம் அடைந்த பேரன் ராஜீவை மருத்துவ மனைக்கு கொண்டு போய் பார்த்த போது அதிர்ச்சியால் முன்பே மரணம் அடைந்து விட்டான் எனகூறினர்.இந்த சம்பவம் தொடர்பாக நான் குன்னம் காவல் நிலையத் தில் புகார் கொடுத்துள் ளேன். இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. காவல் நிலையத் திற்கு நேரில் சென்றால் வெளியே போகச்சொல்லி மிரட்டுகின்றனர். எனவே நிலப் பிரச்னைக்காக எங்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் என அந்தப் புகார் மனு வில் தெரிவித்துள்ளார்.

The post விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: பாதுகாப்பு வழங்ககோரி முதியவர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article