விவசாய துறையில் பயன்படுத்த 14,500 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்கள்: வேளாண் அமைச்சகம் தகவல்

2 weeks ago 5


புதுடெல்லி: ஒன்றிய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘நமோ ட்ரோன் நிதி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 14,500 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு குழுவிற்கு ரூ.8 லட்சம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 3% வட்டியில் தேசிய வேளாண்மை நிதியளிப்பு வசதியிலிருந்து கடனாகப் பெறலாம். ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மற்ற திட்டங்களையும் கடனாகப் பெறலாம். 2024-25 மற்றும் 2025-26ம் நிதி ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ரூ.1,261 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களுடன், ஸ்பிரே கருவி, ட்ரோன் பாக்ஸ், பேட்டரி செட், கேமரா மற்றும் பிஎச் மீட்டர் வழங்கப்படும். குழுவில் உள்ள ஒருவருக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து 15 நாள் பயிற்சி அளிக்கப்படும் என்று ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாய துறையில் பயன்படுத்த 14,500 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்கள்: வேளாண் அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article