விழுப்புரம் மாவட்டத்தை மீண்டும் கலைத்துப் போட்ட திமுக! - அதிமுக வரவான லட்சுமணனுக்கு அடித்தது யோகம்

1 week ago 4

இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.

ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்​குப் போயிருக்​கிறார்​கள். கள்ளகுறிச்​சியை உள்ளடக்கிய ஒன்று​பட்ட விழுப்புரம் மாவட்​டத்​துக்​கும் அமைச்சர் பொன்​முடி தான் செயலா​ளராக இருந்​தார்.

Read Entire Article