விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு நிதியுதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

2 months ago 14

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையர் உலகெங்கும் சென்று வெற்றிகளை குவித்திட பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அந்த அறக்கட்டளை மூலம் தொடர்ந்து ஏராளமான வீரர் - வீராங்கனையர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 4வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள 24 தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையருக்கு விமானப்பயணம் - தங்குமிடம் - போட்டிக்கான நுழைவுக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.24 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது அனைவரும் சாதனை படைத்து இந்திய ஒன்றியத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்தினோம். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article