மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கோரகன் ரெயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை காலை 20 வயதான இளம்பெண் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்தார். அப்பெண்ணிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தன்னை ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாசி ரெயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இளபெண்ணை ஆட்டோ டிரைவர் சந்தித்துள்ளார்.
பின்னர், அந்த இளம்பெண்ணை தனது ஆட்டோவில் வாசை பகுதியில் உள்ள கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேவேளை பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.