விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்: மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

2 months ago 14

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காவேரி. இவர் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (12 வயது). அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுவன் கார்த்திக், தீபாவளி அன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, மின்கம்பி அறுந்து சிறுவனின் மேல் விழுந்தது. இதில் சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article