விராலிமலை, ஜூலை 9: விராலிமலை அருகே உள்ள விளாப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வீரப்பட்டி சரகம், விளாப்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று வருவாய்த்துறை சார்ந்த மனுக்கள், உள்ளாட்சி துறை சார்ந்த மனுக்கள் என அனைத்து துறை சார்ந்த மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post விளாப்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.