விளாத்திகுளம்,ஜன.12: விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப் பணித்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விளாத்திகுளம் அருகே நாகலாபுரம், லட்சுமிபுரம், காடல்குடி சாலைகள் குறுகலாக உள்ளதால் அவதிக்குள்ளான வாகனஓட்டிகள், அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட விளாத்திகுளம் நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதி சாலைகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வுகொண்டனர். இதைத்தொடர்ந்து சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதற்காக 2024-25ம் ஆண்டு நிதியாண்டில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலைகளை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் கோட்டப் பொறியாளர் ராஜபாண்டி, இளநிலைப் பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினர்.
The post விளாத்திகுளம் வட்டாரத்தில் சாலை விரிவாக்க பணி தீவிரம் appeared first on Dinakaran.