விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கண்மாயை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு

3 weeks ago 5

விளாத்திகுளம்,அக்.25: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு காட்டாற்று மழைநீர் மற்றும் ஓடைநீர் கண்மாயின் நீர்வரத்து மடை வழியாக கண்மாய்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தொகுதி முழுவதும் உள்ள கண்மாய், ஓடைகள், நீர்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மழை நீரின் அளவு, மதகுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதூர் யூனியன் ராமச்சந்திராபுரத்தில் கண்மாயில் உள்ள மழை நீரின் அளவு, மதகுகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முதியோர்கள் மழைக்காலங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் புதூர் கிழக்கு செல்வராஜ், விளாத்திகுளம் மேற்கு அன்புராஜன், கிழக்கு சின்னமாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்இமானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், புதூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கோசலைராமன், கிளை செயலாளர் காந்தி, தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட கிராமமக்கள் உடனிருந்தனர்.

The post விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கண்மாயை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article