சென்னை: அகில இந்திய மகிளா காங்கிரஸ் உத்தரவுபடி, தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைக்கப்பட்டது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் பொறுப்பு வகித்து வந்த நிலையில், நேற்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் உத்தரவுபடி, தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
திடீரென அறிவிக்கப்பட்ட இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் புதிய கமிட்டி அறிவிக்கப்படும் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பாவின் கட்டளைப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகிறது. அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின்படி உறுப்பினர் சேர்க்கையை சேர்ப்பவர்களின், புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு appeared first on Dinakaran.