விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

2 months ago 11
அரசு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்றார். அங்கு இருமருங்கிலும் திரண்டிருந்த தி.மு.க.வினர் கட்சிக்கொடிகளை கையில் ஏந்தியபடி வரவேற்பளித்தனர். சாலையோரம் நின்ற மக்களை சந்தித்த முதலமைச்சர் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
Read Entire Article