
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்குள்ள பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத்தொடங்கின. இதனால் அங்கு தீ ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.