
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழ்நாட்டில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது.
கனமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.