
விருதுநகர்,
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென கவுசல்யா (வயது 22) என்ற பெண் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பங்குனி பொங்கலை ஒட்டி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் இந்த விபத்து நடந்துள்ளது.
கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.