விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் அ.தி.மு.க நிர்வாகியும் திரைப்பட இயக்குநருமான பிரபாத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக ஒன்றிய செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்கள் சிலருடன், பிரபாத் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது மகன் மிதின் சக்கரவர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தான் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பிரபாத் சுட்டதில் வீட்டின் மேற்கூரையில் குண்டு பட்டதால் கட்சியினர் அங்கிருந்து சிதறி ஓடியதாக கூறப்படுகிறது.