விராலிமலையில் பால் வியாபாரியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

2 months ago 9

 

விராலிமலை,பிப்.25: விராலிமலை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற இரண்டு வாலிபர்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியை சேரந்தவர் ராமகிருஷ்ணன்(38) பால் பாக்கெட் விற்பனை செய்துவரும் இவர் நேற்று முன்தினம் விராலிமலை அடுத்துள்ள பொருவாய் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆர் ஒன் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் ராமகிருஷ்ணனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் விராலிமலை காவல்நிலையத்தில் வண்டி அடையாளத்துடன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸார் அப்பகுதியில் இயங்கி வரும் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில் விராலிமலை அடுத்துள்ள நாவடிபட்டியைச் சேர்ந்த சூர்யா(23), காளப்பனூரைச் சேர்ந்த அன்பரசு(22) என்ற வாலிபர்கள் ராமகிருஷ்ணணனை வழிமறித்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆன்ட்ராய்ட் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

The post விராலிமலையில் பால் வியாபாரியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article