விராட் கோலியை வீழ்த்த அவரின் உடலில் தாக்குங்கள் - ஆஸ்திரேலிய அணிக்கு இயன் ஹீலி அட்வைஸ்

2 hours ago 2

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

கடைசியாக தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. எனவே இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் குவிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்பதுமே சிறப்பாக விளையாடும் கோலி இந்த தொடரிலும் அசத்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் சமீப காலங்களில் தடுமாறி வரும் அவர் இந்த தொடரின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் இயன் ஹீலி அதிரடியான திட்டத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக விராட் கோலியின் உடம்பில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி தாக்குமாறு அவர் ஆஸ்திரேலிய பவுலர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் விராட் கோலிக்கு எதிராக நம்முடைய வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசவேண்டும் என்பதை பற்றி நான் பார்ப்பேன். அவர்கள் அவருடைய கால் பகுதிகளை அதிகமாக டார்கெட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர் மைதானத்தின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் பந்தை அடிக்கலாம். ஆனால் தற்போது அவர் சுமாரான பார்மில் இருப்பதை பயன்படுத்தி நீங்கள் அவருடைய கால்களை டார்கெட் செய்து விக்கெட்டை எடுக்க பார்க்க வேண்டும்.

ஆனால் அதை ஒவ்வொரு பந்திலும் செய்யாதீர்கள். ஏனெனில் அதை விராட் கோலி சரியாக கனித்து ரன்கள் குவிப்பார். ஒருவேளை அந்தத் திட்டம் வேலையாகவில்லை எனில் உடம்பில் தாக்குங்கள். குறிப்பாக வலது கை பேட்ஸ்மேனான அவருடைய தோள்பட்டையின் பின்பகுதியில் வலது கை பவுலர்கள் தாக்க வேண்டும். அதன் காரணமாக குனிந்து நிமிர்ந்து எப்படியாவது அந்த பந்துகளை எதிர்கொள்ள முயற்சிப்பார்.

அது போன்ற சூழ்நிலையில் லெக் சைடு திசையில் அவருக்கு ஷார்ட் லெக் பீல்டரை நிறுத்தி அதிரடியான பவுன்சர் பந்துகளை வீசுங்கள். அதை எதிர்கொள்ள அவர் ஹுக் அல்லது புல் ஷாட்டை அடிக்க முயற்சிப்பார். ஆனாலும் உயரம் காரணமாக அதை கட்டுப்படுத்தி சரியாக எதிர்கொள்வது கடினமாக இருக்கும். எனவே அவருடைய உடலை தாக்குவது இரண்டாவது திட்டமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article