மேஜர் லீக் கிரிக்கெட்; சியாட்டில் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற வாஷிங்டன் பிரீடம்

5 hours ago 3

புளோரிடா,

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் - சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணி, வாஷிங்டன் அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சியாட்டில் ஆர்காஸ் அணி 82 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

சியாட்டில் ஆர்காஸ் தரப்பில் அதிகபட்சமாக க்ளாசென் 48 ரன் எடுத்தார். வாஷிங்டன் அணி தரப்பில் மேக்ஸ்வெல், எட்வர்ட்ஸ், நெத்ரவால்கர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 83 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வாஷிங்டன் அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வாஷிங்டன் அணி தரப்பில் அதிகபட்சமாக முக்தார் அகமது 36 ரன், ரச்சின் ரவீந்திரா 32 ரன் எடுத்தனர். சியாட்டில் ஆர்காஸ் தரப்பில் சிக்கந்தர் ராசா, ஜஸ்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Read Entire Article