வியாபாரிகள் கவலை: ஈரோட்டில் 148.20 மில்லி மீட்டர் மழைப்பொழிவு

2 months ago 13

ஈரோடு, நவ. 6: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு லேசான மழை பெய்தது. பகல் நேரத்தில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: ஈரோடு-2, மொடக்குறிச்சி-36, பெருந்துறை-3, சென்னிமலை-22, கவுந்தப்பாடி-6, அம்மாபேட்டை-58.40, வரட்டுப்பள்ளம் அணை-8, எலந்தகுட்டை மேடு-4, குண்டேரிப்பள்ளம் அணை-25.20, நம்பியூர்-5, சத்தியமங்கலம்-23.20, நம்பியூர்-44 என மாவட்டத்தில் மொத்தம் 148.20 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 8.72 மில்லி மீட்டர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வியாபாரிகள் கவலை: ஈரோட்டில் 148.20 மில்லி மீட்டர் மழைப்பொழிவு appeared first on Dinakaran.

Read Entire Article