வியர்வை வழியும் சருமம்…தவிர்ப்பது எப்படி?

6 hours ago 3

ஒரு சிலருக்கு குளித்தால் அல்லது முகம் கழுவினால் கூட அதிகமாக வியர்வை வழியும். முகத்தில் இருக்கும் சருமத் துளைகள் பெரிதாக இருப்பதாலேயே இது உண்டாகிறது. சருமத் துளைகள் பெரிதாக இருப்பின் வியர்வை பிரச்னை மட்டுமல்ல, விரைவில் வயதான தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். குறிப்பாக 30 வயதைக் கடந்தாலே இந்த அதீத வியர்வைப் பிரச்னை உண்டாகும். என்ன தீர்வு. இதோ வீட்டிலேயே செய்துகொள்ள சில ஆலோசனைகள்.

முகம் அடிக்கடி கழுவாதீர்கள்

ஒவ்வொரு முறையும் முகம் கழுவுவது எண்ணெய் சுரப்பிகளை மேலும் தூண்டக்கூடும்.தினமும் 2-3 முறை மட்டும் சுத்தமான நீரால் கழுவுங்கள் போதுமானது.உங்கள் சருமத்திற்கு எப்படிப்பட்ட வாஷ், சோப் என ஆராய்ந்து வாங்குவது நல்லது.

ஐஸ்கட்டி தெரபி

முகத்தில் அதிக வியர்வை அல்லது வாடை தோன்றும்போது, ஐஸ்கட்டியை ஒரு சுத்தமான துணியில் வைத்து மெதுவாக தேய்க்கலாம்.இது தோலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது, சருமத் துளைகளைச் சுருக்குகிறது. இந்த ஐஸ்கட்டி தெரபிக்கான நீரில் ரோஜா இதழ்கள்,அரிசி கழுவிய அல்லது ஊற வைத்த நீரையும் சேர்க்க மேலும் பளபளப்பு கூடும்.

மஞ்சள் + ரோஸ்வாட்டர் பேக்

1 மேசைக்கரண்டி மஞ்சள் + சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.முகத்தில் 10 நிமிடங்கள் வைத்துவிட்டு கழுவுங்கள். நச்சுக்கள் குறையும், எண்ணெய் கட்டுப்படும். சரும பிசுக்குகள் நீங்கும்.

தக்காளிச் சாறு

தக்காளியில் உள்ள லைக்கோபீன் தோலை குளிர்ச்சியாக வைத்து எண்ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.வாரத்தில் 2 முறை தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.முகம் இயற்கையான பிளஷ் நிறமும் பெறும்.

சருமத்திற்கேற்ப லைட் மாய்ஸ்சுரைசர்

எண்ணெய் அடிக்கடி வெளிவரும் தோலுக்கு “gel-based, non-comedogenic” வகை மாய்ஸ்சுரைசர் தேர்வு செய்ய வேண்டும்.வறண்ட சருமம் எனில் கிரீம் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம்.

தண்ணீர் பருகுங்கள்

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், உடம்பு அதை சமன்செய்ய எண்ணெயாக வெளிக்கொடுக்கும்.
தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை குடிக்கவும்.இது அதிகமாக வெளியேறும் வியர்வையால் உண்டாகும் நீர் இழப்பை சமன் செய்யும்.
– எஸ். நிஷா.

The post வியர்வை வழியும் சருமம்…தவிர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article